Monday, March 3, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பில் செஞ்சிலுவை சங்கம் கணக்கெடுப்பு !

கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையி கணக்கொடுப்புகளை மேற்கொள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் படி 1990ஆம் ஆண்டில் இருந்து செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு காரியாலயத்திற்கு, பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படும் போது காணாமல் போன 4 ஆயிரத்து 500 இராணுவ மற்றும் காவல்துறையினர் உட்பட 16 ஆயிரம் முறைப்பாடுகள்காணாமல் போனானேர் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு காரியாலய பேச்சாளர் சரசி விஜேரத்ண குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பில் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் இது தொடர்பான அறிக்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று சரசி விஜேரத்ண குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com