Tuesday, March 25, 2014

பிரிவினைவாதத்தை தூண்டும் நபர்களை தேடும் நடவடிக்கை மாத்திரமே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை- கிளியில் இராணுவத் தளபதி

இராணுவம் தொடர்பில் வடபகுதி மக்கள் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்


மேலும் தற்போது நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சி செய்பவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் இங்குள்ள சாதாரண பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்பதுடன் தற்போதைய நிலைமையால் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் என்றோ அல்லது இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றோ எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

தற்போது தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இராணுவத்தினர் செயற்படுகின்றனரே தவிர நாட்டின் சிவில் நிர்வாகத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை என்பதுடன் அவ்வாறான தேவைகள் ஏதும் கிடையாது எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட தற்போது வெளிநாடுகளில் இருக்கும் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்கள் இங்கு மீண்டும் ஒரு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவே இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை என்பதுடன் இவ்வாறான செயற்படுகளை மேற்கொள்வேரை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளிலேயே இராணுவம் தற்போது ஈடுபட்டுவருகிறது எனக்குறிப்பிட்டார்.

மேலும் தேசத்துரோத மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் உரிய முறையில் தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதனைவிட கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இதன் பிரதான சந்தேக நபர்களை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனக்குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் தேவேந்திரமுனை வரை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் இது தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப் பட்டுள்ளது எனினும் தற்போது வடக்கில் உள்ள இராணுவத்தை குறைக்க வேண்டும் என சிலர் கூறிவருகின்றனர் எனினும் ஏற்கனவே, போதியளவு குறைக்கப்பட்டுள்ளது எனவே இனி எந்தவித குறைப்பும் நடைபெறாது என குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com