Tuesday, March 25, 2014

சீ.வி. முன்மொழிந்த மாகாண சபை நிர்வாக, நியம அறிவுரைகளை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள வட மாகாண சபையின் நிர்வாக, நியம அறிவுரை நடவடிக்கைளை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை உத்தரவை நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.


வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவின் அடிப்படையிலேயே இந்த தடையுத்ததரவை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்கள் கே. ஸ்ரீபவன், சத்திய ஹெட்டிகே ஆகியோர் பிறப்பித்திருந்தனர்.

பிரதம செயலாளர் தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தமது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதுடன் தம்மை பதவியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மனுவின் நியாயத் தன்மையை கருத்தில்கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்ய முடிவெடுத்ததுடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் அந்த மனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வடமாகாண முதலமைச்சரால் ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது, மாகாண சபையின் உயரதிகாரிகளின் வெளிப் பயணங்களுக்கு அனுமதி வழங்குவது, அதிகாரிகளின் மாதாந்த அறிக்கையை கோருவது, மாகாணசபையின் கீழ் வரும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் யாவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படுவது, ஊடகங்களுக்கு கருத்துரைப்பது போன்ற விடயங்களில் முதலமைச்சரின் முன் அனுமதி பெறவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தம்மீது நடைமுறைப்படுத்தப்பட்டதாக பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com