Saturday, March 15, 2014

ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி! பொலிஸார் வேடிக்கை பார்த்தனரா?

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று (15) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த போட்டியில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும், மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்கவில்லை எனவும், புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 comments :

Arya ,  March 15, 2014 at 8:13 PM  

கொலைகார வன்முறை யாழ் பாணிகள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள்

Anonymous ,  March 16, 2014 at 8:22 PM  

என்ன கொடுமை ஐயா இது பொலிசார் தலையிட்டால் பொலிசாரின் அடவடித்தனம்
தலையிடாவிட்டால் வேடிக்கை பார்த்தனரா

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com