Thursday, March 20, 2014

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்க முயற்சிகள் ஆரம்பம்! கோபி என்பவனின் செயல் உதாரணம்!

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயி ரளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களாக வர்ணிக்கப்படும் ருகி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகியோரை கைது செய்தது தொடர்பாக விளக்கமளிக்கும்போதே, இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்து, விளக்கமளித்துள்ள அரசாங்கம், அண்மையில் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற கே.பி. செல்வநாயகம் அல்லது கோபி எனப்படும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரின் செயற்பாடுகள், எல்ரிரிஈ அமைப்பிற்கு மீள புத்துயிரளிக்கும் விடயமென, சுட்டிக்காட்டியுள்ளது.

செல்வநாயகம் எல்ரிரிஈ யினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீண்டும் சேகரித்து வரும் தகவல்களும் கிடைத்துள்ளன. அத்துடன் வடபகுதி இளைஞர்களை விடுதலைப்புலி அமைப்புடன் இணைக்கும் செயற்பாடுகளில் கோபி ஈடுபட்டதற்கான தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை அரசாங்கம், ஜெனீவா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ருகி பொனண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com