Thursday, March 20, 2014

பிள்ளையின் கருத்துப்படி, எம் நாட்டில் பயங்கரவாதம் என்ற ஒன்று இருந்ததில்லை! ம. உ. அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றது!

நவநீதம் பிள்ளையின் கருத்துகளின்படி, எமது நாட்டில் பயங்கரவாதம் என்ற ஒன்று இருந்ததில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வாரத்தில் சர்வதேச விசாரணை யொன்று தேவையென கூறிய அவர், இலங்கை தொடர்பாக கண்டறிய வேண்டுமென கூறுவது, ஆச்சரியத்திற் குரியதென, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்து, பல்வேறு கருத்துகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார்.

யுத்தம் நடைபெறும்போது, பயங்கரவாதம் என்ற போர்வையில் பல்வேறு இன மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு இடம்பெற்றதாக அவர் கூறுகின்றார். செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகவே அவர் கூறுகின்றார். உண்மையான விடயம் அல்ல அது. அவரது கருத்துப்படி, இங்கு பயங்கரவதம் காணப்படவில்லை. அரசியல் ரீதியாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு விடயமென அவர் கூறுகின்றார். அப்படியானால் இந்த பயங்கர அழிவுகளை செய்தவர்கள் யார்?

ஆரம்பத்தில் அவர் கூறினார், பயங்கரவாதம் இல்லையென்று, இப்போது கூறுகின்றார் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டமென்று. 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி அவர் இந்த கருத்துகளை வெளியிட ஆரம்பித்தார். அவர் ஏற்கனவே தனது உள்ளத்தை தயார்ப்படுத்திக்கொண்டார். இதில் எந்தவிதமான நேர்மைத்தன்மையும் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், அவரது அரசாங்கத்திற்கும் எதிராக, மேற்கொள்ளப்படும் ஒரு சூழ்ச்சியாகவே இதனை கருத முடியும்.

இதேவேளை இலங்கைக்கு எதிரான சீர்த்திருத்தப்பட்ட ஜெனீவா பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கொள்கை பிரகடனத்திற்கு முரணானது என, இலங்கை ஜெனீவாவில் வைத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது, ஆபிரிக்க பிரதிநிதிகள் மத்தியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சிர்த்திருத்தப்பட்ட ஜெனீவா பிரேரணை தொடர்பாக ஆபிரிக்க பிராந்திய அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காணிப்பு குழுவினரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சீர்த்திருத்தப்பட்ட பிரேரணை மூலம் இலங்கைக்கு எதிரான விசாரணையொன்றை மீண்டும் வலுவூட்டுவதாக, அமைந்துள்ளதாக, தெரிவித்தார். உள்ளக செயற்பாட்டினூடாக சகவாழ்வு திட்டங்கள் சிறந்த மட்டத்தில் முன்னெடுப்பதற்கு, இலங்கை, சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மீள்குடியேற்றம், முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடாத்தியமை, இதில் ஒரு சில விடயங்களாகும். இதனால் இக்கூட்டத்தொடரில் ஆபிரிக்க நாடுகளும் தமது நிலைப்பாட்டை அதே விதத்தில் முன்னெடுக்குமாறு, அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com