Sunday, March 2, 2014

வடமாகாணத்தில் 915 சிவில் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படும்!

வடமாகாணத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநிறுத்த 915 சிவில் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படும். 22ஆயிரத்து 875 உறுப்பினர்களை கொண்டதாக 915 சிவில் பாதுகாப்பு குழுக்களை வடமாகாணத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் சமாதானம் மற்றும் சகவாழ்வை கருத்திற் கொண்டு பொது மக்களின் ஆதரவை பெற்று கொள்வதே இதன் நோக்கமாகும்.

ஊழல், மோசடி, கொள்ளை உட்பட சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்து வதற்கும், அமைதி சூழலை உருவாக்கி வடபகுதி மக்களுக்கு நிம்மதியாக வாழ கூடிய பொறுப்பு இக்குழுக்களிடம் வழங்கப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல கிராம உத்தியோக பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் சிவில் பாதுகாப்'பு குழு ஏற்படுத்தப்படும். அவ்வாறு உருவாக்கப்படும்.

சிவில் பாதுகாப்புக்குழுக்களை வலுவூட்டும் திட்டம் வவுனியா கலாசார மையத்தில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com