Wednesday, March 5, 2014

வடக்கில் இனப்பரம்பலை மாற்ற வேண்டிய எந்தவித தேவையும் இல்லை! ஐ. நா. 25வது கூட்டத்தொடரில் ஜீ.எல். பீரிஸ்!

வடக்கில் இனப்பரம்பலை மாற்ற வேண்டிய எந்தவித தேவையும் இல்லை. இலங்கையில் சிவில் செயற்பாடு களில் பாதுகாப்பு படையினர் தொடர்புபடவில்லை யென்றும், வெளிவிவகார பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் பீரிஸ் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும், எவருக்கும் வாழக்கூடிய உரிமை இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். யுத்தத்திற்கு முன்னர் வட மாகாணத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். 30 ஆயிரம் சிங்கள மக்களும் வாழ்ந்து வந்தனர். இன்று கொழும்பில் உள்ள சனத்தொகையில் 55 சதவீதமானவர்கள், சிங்களவர்கள் அல்லாதவர்களே வாழ்ந்து வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

சில நாடுகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இலங்கைக்கு எதிரான யோசனைகளை சமர்ப்பிப்பதாகவும், இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும், இதனூடாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையென்றும், அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த யோசனைக்கு எவரும் ஆதரவு வழங்கக்கூடாதென்றும், அவர் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கை தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவதாக தெரிவித்த அமைச்சர், காணாமல் போனோர் தொடாபாக கண்டறிவதற்கு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன், குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதனூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

பிற மத ஸ்தலங்கள் மீது ஒரு சில சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்த இவ்வாறான வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின்படி, பொலிஸார் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2 comments :

Arya ,  March 6, 2014 at 1:07 AM  

வெள்ளவத்தையில் தமிழ் கக்கூசு கூட்டம் வாழ முடியும் என்றால் , ஏன் யாழ்பாணத்தில் சிங்கள மக்கள் வாழ் முடியாது ? இலங்கை தமிழ்மக்களுக்கு இது ஒன்றும் பிரச்சனை இல்லை அமெரிக்காவுக்கும் வெள்ளை காரனுக்கு குண்டி கழுவி பிழைக்கும் புலன் பெயர்ந்த களிசரைகளிக்கும் தான் இது பிரச்சனையாக உள்ளது.

மகா தமிழ் ஈழம் ,  March 6, 2014 at 5:37 PM  

இலங்கை தமிழ்மக்களுக்கு இது ஒன்றும் பிரச்சனை இல்லை அமெரிக்காவுக்கும் வெள்ளை காரனுக்கு குண்டி கழுவி பிழைக்கும் புலன் பெயர்ந்த களிசரைகளிக்கும் தான் இது பிரச்சனையாக உள்ளது.

முற்றிலும் உண்மை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com