Sunday, February 16, 2014

TNA மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசின் வரப்பிரசாதங்கள் குறைவின்றி வேண்டுமாம்!

வடமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் சில உறுப்பினர்கள் பொது வைபவங்களில் தேசியக் கொடியை ஏற்றமாட்டோம் எனக் கூறி வருவது மிகவும் வருந்தத்தக்க செயற்பாடாகும் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிலும் அரசாங்க அதிகாரிகளாக கடமையாற்றி ஓய்வு பெற்று அதிஷ்ட லக்ஷ்மியின் பார்வையால் அரசியலுக்கு வந்தவர்கள் அரசாங்கம் வழங்கும் சகலவிதமான சுகபோ கங்களையும் அனுபவித்துக் கொண்டு அந்த அரசாங்கத்தின் தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது ஏன் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் தேசியக் கொடி என்பது அரசாங்கத்தின் கொடியல்ல அது எமது தாய் நாட்டின் கொடி எனவே அக்கொடியை இவர்கள் ஏற்ற மறுத்தால் அரசாங்கம் வழங்கி வரும் சகலவிதமான சுகபோகங்களையும் துறந்து தமது சொந்த உழைப்பில் வாங்கிய துவிச்சக்கர வண்டிகளிலேயே பயணங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் ஏனைய சகலவிதமான சலுகைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் பாபு சர்மா தெரிவித்தார்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இவ்விடயத்தில் தான் பாராட்டுவதாகவும் பாபு சர்மா தெரிவித்தார். 

ஏன் எனில் அரசாங்கம் வழங்கும் பொலிஸ் பாதுகாப்பு, வாகன வசதிகள், பங்களா வசதிகள் என மற்றும் பல வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் தமது தாய் நாட்டின் மீதும், அதனை வழிநடத்தும் அரசாங்கத்தின் மீதும் மரியாதை வைத்துச் செயற்படுவதைத்தான் பெரிதும் வரவேற்பதுடன் இவர்களை தான் மதிப்பதாகவும் பாபு சர்மா தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com