Friday, February 14, 2014

புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த கனேடியத் தமிழன் அமெரிக்க நீதவானிடம் மன்னிப்பு கோரியுள்ளான்.

தடை செய்யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆயுத விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியரான பிரதீபனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளில் பிரதீபன் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதத்தில் பிரதீபனுக்கு எதிரான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டமை ஓர் மாபெரும் தவறு எனவும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் பிரதீபன் தெரிவித்துள்ளதுடன் தன் தவறுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார். நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தம்மை விடுதலை செய்யுமாறும் அவர் கோரியுள்ளார்.

ரொரன்டோவிலிருந்து அமெரிக்கா சென்று ஆயுத கொள்வனவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதீபன் கனடாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாத அடிப்படையில் கைது செய்யப்படடிருந்த பிரதீபன் கனேடிய நீதிமன்றில் செய்திருந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள பிரதீபனுக்கு பத்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சபட்சமாக 30 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com