ஹிருணிகா வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார். எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹிருணிகா பிரேமசந்திர போட்டியிட உள்ளார்.
ஆளும் கட்சியில் போட்டியிடுவதற்காக ஹிருணிகா விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிருணிகா அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். மத்திய கொழும்பின் இணை தொகுதி அமைப்பாளராகவும் ஹிருணிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment