Tuesday, February 4, 2014

முஸ்லிம்களில் 5000 பேர் காணாமல் போயுள்ளனர்! - ஜனாதிபதியின் ஆணைக்குழு

முஸ்லிம்கள் 5000 பேர் காணாமல் போனதாக இதுவரையிலும் எமது ஆணைக்குழுவுக்கு முஸ்லிம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போனோர்கள் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.

நேற்று(3) வெள்ளவத்தையில் உள்ளகாணமல்போனோர் ஆணைக்குழுவினால் காத்தான்குடியில் விடுதலைப்புலிகளினால் 120 பேர் காணமல் போன விடயமாகவும் 65 பேர் புனித மக்காவுக்கும் வேறு சிலர் வியாபாரத்திற்கும் சென்றோர் 1990 களில் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு வருகையில் குருக்கலமடத்தில் வைத்து விடுதலைப்புலிகளினால் கடத்திச் சென்று கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் நஷ்ட ஈடு பெறுவது இவர்கள் காணாமல் புதைக்கப்பட்ட எச்சங்களை அடையாளங்காண்பது பற்றி இன்று கூட்டமொன்று நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த பொது ஜன ஜக்கிய முன்னணியின் கிழக்குமாகண உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாருக் தலைமையிலான குழுவைச் அழைத்து இன்று காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் சந்தித்து கலந்துறையாடினார்.

இச் சந்திப்பில் காணமல்போனோர்களின் உறவினர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவதற்கு கொழும்புக்கு அழைத்துவரும்படியும், காணமல் போனோர்களின் புகைப்படங்கள் தஜ்தாவேசுக்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டது.

அத்துடன் ஆணைக்குழு எதிர்வரும் மார்ச் 2ஆம் வாரத்தில் மட்டக்களப்பு சென்று மனித எச்சங்கள் அடங்கியுள்ள இடங்களை பார்வையிடுதல் மற்றும இது சம்பந்தமாக நீதிமன்ற பரிசோதனை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச பரிசோதனைகளுக்கு முறைப்பாடு செய்தல் வேண்டும் என தீர்மானிக்கப்ட்டது.

(அஸ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com