இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தினச் செய்தி
சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று. காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புக்களின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்த்து. எமது நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவு கூர்வோம்.
நாம் 66 வத சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.. இந்த நிலைமையைத் தொடரவிடாமல் எமது பிரச்சினைகளே நாங்களே தீர்த்துக் கொள்ளும் ஓர் ஆரோக்கியமான ஜனநாயக பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் வாழும் சகல இன மக்களும், “இலங்கை எமது நாடு, இந்நாட்டின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் எந்த ஒரு வெளித் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறும் நிலை வர வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற சுதந்திரம் நிறைவு பெறும்.
66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
0 comments :
Post a Comment