Friday, February 14, 2014

நவி பிள்ளையிடம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஹக்கீமும் முறையிட்டுள்ளாராம். கூறுகிறார் வீரவன்ச

இந்த அரசில் இருந்து கொண்டு சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருபவரும், அரசின் பங்காளிக் கட்சியான முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ரவுப் ஹக்கீமும் அவரது செயலாளர் ஹசன் அலியும் இணைந்து இலங்கைக்கு எதிரான மணித உரிமை மீறல் சம்பந்தமாக அவர்களது அறிக்கையை ஜ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடமும் சமர்ப்பித்துள்ளனர் என தேசியசுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று(13) சீதுவையில் உள்ள லியனகேமுல்லை சந்தியில் கம்பஹா மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் தேசிய சுதந்திர முன்ணனி சார்பாக மேல் மாகாணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதுவை நகர சபைத் தலைவர் லலந்த குணசேகரவை ஆதரித்து நடாத்திய கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்ததாவது–

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இலங்கை மனித உரிமை மீறல் சம்பந்தமாக அண்மையில் நவநீதம் பிள்ளை இலங்கைவந்தடைந்த போது அவருக்கு 10 ஆயிரம் வசனங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கவேண்டி இருந்தது. இதற்காக முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தலைமையிலான குழு நவநீதம்பிள்ளையைச் சந்தித்திருந்தது. நவநீதம்பிள்ளைக்கு தேவiயாக இருந்த மனித உரிமை மீறல் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளையும் கையளித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தொடருக்கு ஹசன் அலியின் அறிக்கையும் 10 ஆயிரம் வசனம் கொண்ட அறிக்கையில் சேர்க்கப்பட்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அரசின் பங்காளியாகவும் இருந்துகொண்டு அமைச்சர் என்ற அந்தஸ்த்தில் சகல வரப்பிரதாசங்களையும் அனுபவித்துக் கொண்டு இவ்வாறான தேசத் துரோகம் செய்கின்றவர்களும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.

அமேரிக்காவின் தூதுவராலயம் ஊடாக இலங்கைக்கு எதிரான மணித உரிமை கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 28ஆம் அவர்கள் சேகரித்தவை இங்கு சமுகத் தந்தவர்கள் கொடுத்த சகல தகவல்களும் சேர்க்கப்பட்டு அறிக்கை எழுதப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு முடிந்துவிட்டது. இனி வாக்கெடுப்பு மட்டுமே மார்ச் 28ஆம் திகதி உள்ளது என்றார்

(அஷ்ரப் ஏ சமத்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com