Saturday, February 15, 2014

சாட்சியமளித்தவர்களை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை– ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்!

காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணக தெரிவித்தார்.


காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்ட மூலம் நாடாளுமன்றின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் இடத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் நஷ்ட ஈடுகளும் வழங்கப்படும் என்பதடன் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி இவ்வாறாக சாட்சிகளை நாம் விசாரணை செய்த பின்னர் அவர்களை அச்சுறுத்துவது என்பது சட்டத்திற்கு முரணானது எனவே எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவே அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தினால் எமது செயற்பாட்டினை நிந்தித்தல் என்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com