Friday, February 7, 2014

வீட்டுத் திட்டம் வேண்டுமானால் என்னுடன் வாங்க: பெண்களை வருடி அதற்கு அழைக்கும் வவுனியா செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் (இணைப்பு 2)

போரால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசின் கருணையால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தை பெறுவதற்கு வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் 50,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் காசு கொடுக்காத பட்சத்தில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பப் பெண்களை அதுக்கு வருமாறு கேட்பதாகவும் எமது இணையம் முன்னர் தெரியப்படுத்தியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று ம் தெரியப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக மாணிக்கம் ஜெகன் என்பவர் அதிரடி இணையம் மூலம் எமது செய்தி தவறானது என சுட்டிக்காட்டுவதாக போய் எமது செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை தெரியப்படுத்துகின்றோம். முழங்காலுக்கும் மொட்டம் தலைக்கும் முடிச்சுப் போடுவது போன்று நாம் வெளியிட்ட செய்திக்கு ஏதொ ஒரு கடிதத்தை அவ் அவர் வெளிப்படுத்தியுள்ளமை கவலையளிக்கிறது.

இதனை திசை திருப்பும் முகமாக உண்மைக்குப் புறப்பான போலியான கடிதங்கள் சில திட்டமிட்ட ரீதியில் அவரால் அனுப்பப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக் கிராமங்களைச் சேர்ந்த நான்கு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இலங்கைநெற் இணையத்தளத்திடம் தெரிவிக்கும் போது, தவறான குற்றச்சாட்டு – பொது அமைப்புக்களின் குரல்!! என்னும் தலைப்பில் எமது அமைப்புக்களின் கையொப்பத்துடன் கூடியதாக வெளியிடப்பட்ட கடிதங்கள் போலியானவை ஆகும். இக் கடிதம் என வெளியிடப்பட்டுள்ள இரண்டு தாள்களும் வேறு வேறானவை. அவை வேறு தேவைக்காக பெறப்பட்டவை. அது தொடர்பில் நாம் ஏற்கனவே வவுனியா மாவட்ட செயலகத்தால் விசாரணை செய்யும் அதிகாரிகளிடம் வெளிப்தியுள்ளோம்.

இக் கடிதத்தின் மூலப் பிரதிகளை குறித்த கிராம அபிவிருத்திச் சங்கங்களின் கையொப்பத்துடன் வெளிப்படுத்த முடியுமா என எமது இணையம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இக் கிராம அலுவலரால் பாதிக்கப்பட்ட ஒருவர் இவர் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கத்தியால் குத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது செயற்பாடுகள் இன்று மட்டுமல்ல அன்று முதலே பிரச்சனை நிறைந்ததாகவே இருந்துள்ளது.

இவர் லஞ்சம் கேட்டமைக்கான ஆதாரங்கள், பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தேவையேற்படின் அதனை வெளிப்படுத்துகின்றோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கடிதம் புதிய கோவில்குளம் மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்குரியது. அச் சங்கத் தலைவி தான் குறித்த கிராம அலுவலரின் எழுதுவினையராக கடமையாற்றுபவர். அதனால் அவரைக் காப்பாற்ற முன்னர் முயற்சி செய்திருக்கலாம்.

இருப்பினும் எம்மால் அவர் மீது குற்றச் சாட்டப்பட்டுள்ள குற்றச் சாட்டுசுக்களையோ அல்லது விசாரணை இடம்பெறவில்லை என்பதையோ அக் கடிதங்கள் சுட்டிக்காட்டவில்லை என்பதை குறித்த செய்தினை அனுப்பிய மாணிக்கம் ஜெகன் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக எமது இணையம் ஆய்வு செய்த போது இக் கிராம அலுவலர் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவருக்கு எதிராக வாக்கு மூலம் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். அத்துடன் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதனால் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவது பொருத்தமற்றது எனக் கருதி எமது இணையம் தற்போது அவற்றை வெளிப்படுத்தவில்லை. விசாரணையின் பின் எமது இணையம் இது தொடர்பான ஆதாரங்களை முழுமையாக வெளிப்படுத்தும். புலிகளாலும் இராணுவத்தாலும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கின்ற போது வீடு தேவை எனக் கேட்கும் மக்களிடம் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரி லஞ்சம் கோருவது எவ்வகையில் நியாயம்? பாலியல் லஞ்சம் பெற முனைவதை சரி என ஏற்றுக் கொள்வதா? அவர் செய்வதை நீங்கள் சரி என ஏற்றுக் கொண்டால் நீங்களும் அந்த நிலையில் இருந்தால் இது தான் செய்வீர்களா? மனச்சாட்சியைத் தொட்டு கேளுங்கள்! முழு ஆதாரத்துடன் விரைவில்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com