Friday, February 7, 2014

உலக சைவத் திருச்சபையின் விசேட செயற்றிட்டம் வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகியது.

வவுனியாவில் இருந்து சுமார் 16 கிலோ மிற்றர் தொலைவில் செட்டிகுளம் கோட்டத்தில் அமைந்திருக்கும் வ/பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியாலயம் கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையில் மேலோங்கி நிற்கின்றது. குறிப்பாக 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் முதல் இடத்தை இப் பாடசாலை மாணவியே பெற்றுள்ளமை இப் பாடசாலை வரலாற்றில் முக்கியமான விடயமாகும். அத்துடன் 2012 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 98 வீத மாணவர்கள் சித்திடைந்துள்ளமையும் இப் பாசாலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிலையில் இப் பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.ஜேசுதாசன் மற்றும் வரலாறு ஆசிரியர் திரு வி.சிவதர்சன் ஆகியோரது வேண்டுகோளின் படி இப் பாடசாலைக்கு மைதானம் புனரமைக்க வேண்டிய தேவை அடிப்படையில் அகில இலங்கைக்கான உலக சைவத் திருச்சபை மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பதனை பாடசாலைச் சமூகம் அறிவித்துள்ளது.

பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் இது தொடர்பாக கேட்ட போது, கல்வி நிலையில் அதி உன்னத இடத்தைப் பெற்று வரும் எமது பாடசாலை விளையாட்டுத் துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால் அதற்கான வளங்கள் எம்மிடம் பற்றாக்குறையாகவே இருக்கின்றது. பல அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச அதிகாரிகள் ஆகியோருடன் இது தொடர்பாக கேட்டபோது சரியாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில் உலக சைவத் திருச்சபையின் இலங்கைக்கான தலைமைக் காரியாலயத்தின் செயலாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு நிலமையை எடுத்துக்கூறிய பொழுது எமக்கு மைதானத்தை புனரமைத்து தருவதாக கூறி 07.02.2014 வெள்ளிக்கிழமை பணி ஆரம்பமாகியுள்ளது. எமது பாடசாலை மைதானத்தில் 400 மீற்றர் ஓடு தளம் அமைக்கக்கூடிய நிலப்பரப்பு இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் இருந்தோம். ஆனால் உலக சைவத் திருச்சபையின் உதவியில் இம் முறை விளையாட்டுப் போட்டியை கோலாகலமாக நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக உலக சைவத் திருச்சபையில் அகில இலங்கை செயலாளர் நாயகம் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பாடசாலையின் முறையான, நியாயமான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு நாம் இந்த திட்டத்தை வழங்கியிருக்கின்றோம் என பதிலளித்தார்.

வவுனியா நிரூபர்.






2 comments :

Unknown February 9, 2014 at 6:50 AM  

Congratulations to General Secretary World Saiva Mission Srilanka

Dr. Vipulananda

Unknown February 9, 2014 at 6:50 AM  

Congratulations to the secretary of World Saiva mission Srilanka

Dr. Vipulananda
Canada

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com