Saturday, January 18, 2014

கொலை செய்யப் போகிறேன்! ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்த பெண்.....

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமவை கொலை செய்யப் போவதாக டெனீஸ் ஓநீல் என்ற பெண் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 26ம் திகதி கைது செய்யப்பட்டார். மிரட்டலோடு நின்று விடாமல் அதனை நிறை வேற்றும் எண்ணத்திலும் செயல்பட்டதாக ஓநீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடம் வரை சிறை தண்டனையும், 2,50,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ஏற் கெனவே 2008ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்{க்கும், 2009ம் ஆண்டு தனது மேலதிகாரிக்கும் ஓநீல் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com