Saturday, January 18, 2014

60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் 80 வயது முதியவர் !!(படங்கள்)

ஈரானைச் சேர்ந்த அமோவ் என்ற 80 வயது முதியவர் கடந்த 60 வருடங்களாக குளிக்காமல் இருந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் பழுதான இறைச்சியையும் இறந்த உயிரினங்களில் மாமிசத்தையும் உண்டு வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை அடுத்து, சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண் டவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவி யின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இவரை பிடித்து குளிக்க வைக்க ஊர்க்காரர்கள் முயற்சித்தும் அது பலனளி க்கவில்லை. இவர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்ப வரின் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை' என 1974ஆம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட அவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது. தற்சமயம் இந்த ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து அமோக சாதனை ப்படைத்துள்ளார்.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com