ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை யாழ். விஜயம்!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 19ம் திகதி யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தி த்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாட வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் அமைக்க ப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையை ஜனாதிபதி திறந் துவைக்கவுள்ளார்.
அத்துடன் புற்று நோய் புதிய சிகிச்சை கூடம் அமைப்பதற்கான அத்திவாரக் கல்லை யும் ஜனாதிபதி நடவுள்ளார்.
மாத்தளை தொடக்கம் யாழ்.பருத்துறை வரையான நடைபயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியின் மூலம் புற்றுநோய் வைத்தி யசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment