Monday, January 13, 2014

அரசியலுக்காக நாடகமாடும் இரண்டு ஆயர்களால் உருவாகும் விபரீதம் என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மன்னார் ஆயர்கள் தெரிவித்த கருத்தால் குறித்த ஆயர்களுக்கு பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மதகுரு மார் தத்தமது மத சம்பந்தப்பட்ட பணிகளுடன் சமூகப் பணியாக நாட்டினதும், தாம் சார்ந்த சமூகத்தினதும் நன் மைக்காக செயற்படவேண்டுமென்பதே அனைவரதும் எதிர் பார்ப்பு.

மதகுருமார் தமது மதம் சார்பான விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனைவிடுத்து தாம் அரசியலில் ஈடுபடும் அரசியல்வாதியாக தம்மை மாற்றி அரசியல்வாதி போன்று செயற்படவேண்டுமானால் தனது மதகுரு அந்தஸ்தை துறந்து முழுநேர அரசியல் வாதியாக செயற்படவேண்டும்

மதகுருவாக இருந்துகொண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இல்லாத இலங் கையின் இறைமைக்கும் குந்தகம் ஏற்படுத்தகூடிய கருத்துக்களை தெரிவிப்பதால் இலங்கைக்கு எந்தபாதிப்பும் ஏற்படபோவதில்லை மாறாக அது தமிழ் மக்களை பாதிப்பதாகவே அமையும் அத்துடன் யாழ் மன்னார் ஆயர்கள் தெரிவித்த கருத்து வீம்பிற்காகச் செயற்படும் எதிர்க்கட்சியினரது பொய்ப் பிரசார வேலை எனச் சர்வமதத் தலைவர்களும், கல்விமான்களும், சிவில் சமூகத்தினரும் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு பயங்கரவாதப் பிடியிலிருந்த போது கொடூரமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முனைந்த சில மதகுருமார் இப்போது மீண்டும் அதேமாதிரியான தொழிலில் ஈடுபட்டு வருவதனைக் காண முடிகிறது குற்றம் சாட்டியுள்ளனர்.

பயங்கரவாதிகள் போன்று யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் வகைகள், மாதிரிகள் பற்றியும், யுத்த களத்தில் நின்று கணக்கெடுத்தவர்கள் போன்று இறந்த வர்களின் எண்ணிக்கை பற்றியும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடமும், ஐ.நா. பிரதிநிதிகளிடமும் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து வருவதானது இவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருந்து வந்ததை உறுதி செய்வதாகவே உள்ளது.

அத்துடன் இவர்களில் சிலர் புலத்தில் வாழும் புலி ஆதரவாளர்களின் டொலர் களுக்காக இங்கே குழப்பதை விளைவிப்பவர்களாகச் செயற்பட்டு வருகின்றனரோ எனும் பெருத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது எனச் சிவில் சமூகத்தினர் தெரிவிக் கின்றனர்.

மதகுரு எனும் சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் அதிஉயர்ந்த அந்தஸ்தை இன்னொருவரது அல்லது குழுவினரது தேவையை நிறைவேற்றுவதற்காக ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அது அவர்கள் சார்ந்த மதத்தையும், அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் குறைத்து மதிப்பிடச் செய்யும். எனவே இனிமேலாவது அரசியல் விவகாரங்களில் மதகுருமார் ஈடுபடுவதாயின் அவர்கள் அரசியலில் நேரடியாக இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என சர்வமத குருமார் சிலர் தெரிவித்துள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com