தேவாலயங்கள் மீதான தாக்குதல்: 8 பிக்கு உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
நேற்று ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவ குழுவினரில் 8 பௌத்த பிக்குமார் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
ஹிக்கடுவை கல்வாரி தேவாலயம் மற்றும் அசம்பிளி ஒப் கோட் தேவாலயங்களில் காலை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் இத்தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இச்சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்று காலி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அடையாளம் காணப்பட்டுள்ள எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
1 comments :
யாழ் மன்னார் ஆயர்கள் நாட்டை காட்டி கொடுத்ததுக்கு நல்ல அடி ஹிக்கடுவவில் விழுந்துள்ளது. இப்படி போன்ற துரோகிகளை சும்மா விடக் கூடாது.
Post a Comment