ஆர்வமும் ஊக்கமும் அனைவருக்கும் நிலைக்கட்டும்- வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியின் பொங்கல் வாழ்த்து செய்தி!!
அறுவடை காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் மங்களகரமான தைப்பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் பரஸ்பரம் நல்லெண்ணங்களை பரிமாறிக் கொள்வார்கள் என்பதுடன் இத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் வருடம் பூராகவும் ஆர்வமும் ஊக்கமும் நிலைத்துக் கொள்ளும் என தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், வட மாகாணமானது பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுடன் வாழ்க்கைச் சூழலில் எல்லா அம்சங்களிலும் அது செழிப்புற்று விளங்குவதுடன் வட மாகாண மக்கள் உண்மையான சுதந்திரத்தினை அனுபவிப்பதுடன் தைப்பொங்கல் திருநாளையும் மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றார்கள்.
இதிலும் பெரும்பாலான வட மாகாண மக்கள் கமத்தொழிலை பிரதானமாக மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதுடன் அதிலும் அதிகமானவர்கள் விசேடமாக நெல்லை உற்பத்தி செய்பவர்கள் எனவே தைப்பொங்கல் இம்மாகாணத்தில் மிகவும் விசேடமாக கொண்டாடப்படும் இத்தேசத்தில் சமாதானமும் அன்னியோன்யமும் நிலவும் இக்காலகட்டத்தில்இந்த அமைதி சூழலை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
ஓர் விவசாய அறுவடை காலத்தை பிரதிபலிக்கும் இந்த தைப்பொங்கல் திருநாளில் தங்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இப்போதும் வருங்காலத்திலும் தங்களுடைய வாழ்க்கை சிறப்படைய வேண்டுமென வாழ்த்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment