Sunday, January 19, 2014

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை திறப்புவிழாவில் ஜனாதிபதியுடன் கூட நிற்க முண்டியடித்த கூட்டமைப்பினர்

யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடபகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் செய்து வரும் நிலையில் இன்று (19) யாழ் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக் கட்டிடடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது.

இத் திறப்பு விழாவில் ஜனாதிபதியின் அபிவிருத்தி தொடர்பாக தெரிந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கைலாகு கொடுத்து ஜனாதிபதியுடன் பம்பலடித்து மகிழ்ந்து கொண்டிருந்த போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் வடமாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் பா.டேனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் முண்டியடித்து கொண்டு முன் இருக்கைகளில் அமர்ந்து ஜனாதிபதியின் வரவுக்கு ஆதரவு கொடுத்தனர்.

தமிழ் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தி அவர்களை அரசிடம் இருந்து பிரிக்க முயலும் இவர்கள் தமது நிலையில் ஜதார்த்தமாக இருப்பது கவலையளிப்பதாக வடபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  January 20, 2014 at 10:46 PM  

This is a TNA.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com