Thursday, January 30, 2014

உகண்டா பிரதி பாதுகாப்புச் செயலாளர் குழு யாழ்.விஜயம்!

உகண்டா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிடதும் நட்புறவினை ஏற்படுத்தும் முகமாக இலங்கை வந்த உகண்டாவின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஓடொன்கோ ஜெஜி உட்பட்ட 6 பேர் அடங்கிய குழுவென்று இன்று (30.01.2014)காலை 8.10 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.


உலங்கு வானூர்தி மூலம் யாழ் வந்த இந்த குழுவினருக்கு பலாலி விமானப்படை தலைமையகத்தில் செங்கம்பள வரவேற்பும் விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் வளங்கப்பட்டது.

தொடர்ந்து இக்குழுவினர் பலாலி படைத் தலைமையகத்தில் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி உதய பெரேராவுடன் விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டனர். 

இந்த கலந்துரையாடலின் போது உகண்டா குழுவினரை வரவேற்ற யாழ்.கட்டளைத்தளபதி வடக்கின் சூரியனாக காணப்படும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி கொள்வதுடன் எமது நாட்டில் மிகவும் பிரபல்யமாகவும் அதிகம் காணப்படும் யானைகளை நீங்கள் ஒருமுறை யாவது பார்க்க வேண்டும் என தெரிவித்ததுடன் இந்த சந்திப்பின் அடையாளமாக யானை உருவ சிலையையும் வளங்கிவைத்தார்.

கட்டளைத் தளபதியுடனான சந்திப்பினைத் தொடர்ந்து, ஓடொன்கோ ஜெஜி குழுவினர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், யாழ்.கோட்டையின் அபிவிருத்தி பணிகள் மற்றும் யாழ்.பொது நூலகத்தினையும் பார்வையிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com