பிரித்தானிய பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!! இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்கள் நால்வருக்கு பிரித்தானியாவில் சிறை!
சட்டவிரோதமாக இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பும் முகவர்களாக செயற்பட்ட ஜந்து போருக்கு சிறை த்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு இலங்கையர் களும் ஒரு பிரித்தானிய பிரஜைக்குமே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரேதமாக பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்வத ற்கு இவர்கள் 4500 பவுண்ஸை கட்டணமாக அறவிட்டு வந்ததாக பிரித்தானிய உட்துறை செயலகம் தெரிவித்து ள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் குடியேற்ற வாசிகளில் சிலர் அங்கிருந்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி வட அமெரிக்காவிற்கும் பயணிப்பதாக உட்துறை செயலகத்தின் பேச்சாளர் குறிப்பிட் டுள்ளார்.
ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட லூடொன் பகுதியை சேர்ந்த 37 வயதான சுதர்ஷன் ஐயகொடி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 வருடம் 4 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.
குறித்த குற்றத்திற்காக 42 வயதான சுப்ரமணியன் விக்னராஜாவிற்கு 3 வருடம் 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் கமலநேசன் கந்தையா, ஜோன் அனீஸ் சௌந்தரநாயகம் ஊவைஸ் ஆகிய இரண்டு இலங்கையர்களும் குறித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கென்ட் பொலீசார், தேசிய குற்றத்தடுப்பு முகவர் நிலையம் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் உட்துறை செயலகம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் என உட்துறை செயலகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment