சவுதியில் இலங்கைப் பிரஜைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றம்!
சவுதியில் இலங்கைப் பிரஜைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் 2006 ஆம் ஆண்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கைப் பிரஜைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கார் ஒன்றினால் மோதி வர்த்தகர் ஒருவரை கொலை செய் தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட 26 வயதான இலங்கையருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த இலங்கைப் பிரஜைமீது நேற்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்தார் நட்டஈட்டினை பெறுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் குறித்த இலங்கையருக்கு சார்ஜா மத்திய சிறைச்சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.
இதேவேளை குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முன்னர், ஐக்கிய அரபு இராச்சியத்தால் தமக்கு அறிவிக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்ற முன்னர், குறித்த இளைஞரின் உறவினர்கள், அவரைச் சந்திக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பு வழங்கப்பட்ட தாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
இது துபாயில் என்று படித்தேன். இப்போது சவூதி என்றிருக்கிறது... பொதுவாக தமிழ் பேப்பர்கள் அரபுலகில் எது நடந்தாலும் சவூதி என்று பொத்தாம் பொதுவில் செய்தி வெளியிடுவது சரியல்ல. ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வெளியிடுவது நன்று
Post a Comment