அவுஸ்ரேலியா அரசின் விசேட பாராளுமன்ற உறுப்பினர் குழு: ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி இடையே சந்திப்பு!
ஆசிய அறக்கட்டளை காப்பாளர் குழுவின் நிறைவேற்றுக் குழு தலைவரும் தூதுவருமான மைக்கல் ஆமகோஸ்ட் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலு வலகத்தில் சந்தித்து ஆசிய அறக்கட்டளையின் நிதியுத வியுடன் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் வட மகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் ஆளுநரும் குழுத்தலைவரும் ஞபாகார்த்தப் பரிசு களையும் பரிமாறிக் கொண்டார்கள்.
இதே வேளை இந்த ஆசியா அறக்கட்டளை அமைப்பானது இலங்கையில் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த சூழல் ஏற்படுத்த அரசு மற்றும் சமூகங்களின் இடையே நல்லுறவுகளை வலுவூட்டி குடிமக்கள் மற்றும் அரசாங் கத்தின் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பி உள்ளூர் மட்டத்தில் மோதல்களை குறைத்து உள்நாட்டு போரில் ஒரு கால் நூற்றாண்டு பாதிக்கப்ட்டவர்களை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
0 comments :
Post a Comment