Thursday, January 23, 2014

2005 இல் செய்ததை பொதுமக்கள் இன்றும் செய்ய வேண்டும்! - விமல் வீரவன்ச

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் செய்தது என்னவென்றால், தமது மக்களுக்குத் தேவையானவற்றை ஏற்றுக் கொள்கின்ற தலைமைத்துவத்தை வெற்றி கொள்ளச் செய்து, தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வது எனவும், இன்றும் அவ்வாறே செயற்பட்டு இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் இரண்டாவது தடையைத் தாண்டுவதற்கு கொள்கை, குறிக்கோள் போன்றவற்றின் கீழ் 2005 இல் செய்ததை பொதுமக்கள் இன்றும் செய்ய வேண்டும்!செயற்படும் பயணத்திற்கு தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கட்டுமானம்,பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெளிவுறுத்துகிறார்.

பொராலை கெம்பல்பிட்டியில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் பிரதம பேச்சாளராக்க் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெளிவுறுத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த விமல் வீரவன்ச,

“கொழும்பு மாவட்ட மாநாட்டில் இந்நேரம் இதனை நடாத்துவற்குத் தீர்மானித்ததன் காரணம் என்னவென்றால், நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, முகங்கொடுத்து வெற்றிகொள்ள வேண்டிய சவால் ஒன்று உள்ளதனாலாகும். இச்சவாலை வெற்றிகொள்வதற்குத் தேவையான தேசிய ஐக்கியத்தையும், மக்களை ஒன்றுதிரட்டுவதற்காகவுமே நாங்கள் இதனை ஏற்பாடு செய்தோம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இந்நாடு பெற்றுக்கொண்ட வெற்றிவாகையை மீண்டும் திசை திருப்புவதற்கு பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு எங்களுக்கு முடியாதிருப்பதனாலாகும். இந்நாட்டில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தி மீண்டும் மேற்கத்தேய அடிவருடிகளின் கைப்பொம்மையாக நாட்டை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுக்க்க் கூடாது என்பதற்காக… இந்நாட்டை சகலவித பயங்கரவாத துரோகங்களிலிருந்தும் காப்பற்றுவதற்கு மக்கள் சக்தியே தேவைப்படுகின்றது என்பதால்… அந்த ஒருமைப்பாடு, அந்த சக்தி, அந்த ஆயுதம், சக்தியை மேம்படுத்தும் முதலாவது கட்டம்தான் இந்த தேசிய சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு என்பதை நாங்கள் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

நாங்கள் எல்லோரும் இன்று இவ்விடத்திற்கு வந்த நோக்கம், சவாலை முறியடிக்கும் எண்ணத்தை தலைமேற்கொள்ள… இந்நாடு எச்சந்தர்ப்பத்திலாவது எவ்வகையிலாவது சவால்களை சந்திக்கின்றபோது, அந்த சவாலை வெற்றி கொள்ள மிகவும் தைரியமாக முன்வந்தவர்கள் நாங்கள்… மிகப்பெரும் தைரியத்துடன் செயற்பட்டவர்கள்… இந்நாட்டு மகா சங்கத்தினர் உட்பட இந்நாட்டு தேசாபிமானிகள் அன்று தூங்கிக் கொண்டு இருந்திருந்தால், அன்று நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்வோம் என்ற நோக்கோடு இருந்திருந்தால், இந்நாடு இன்று நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்திருக்காது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பு வந்தவேளை, தென்னிந்தியர்கள் இந்நாட்டில் கால்பதித்த நேரம், எமது முன்னோர்கள் சவால்களை சந்தித்தார்கள்… இலங்கை மாதாவுக்காக அனைத்துச் சவால்களையும் ஏற்றுக் கொண்டார்கள்… கடும் பிரச்சினைகள் எழுந்தபோது பின்வாங்கிச் செல்லவில்லை. அந்தச் சவாலை வெற்றி கொள்ளவியலுமா? முடியாதா? என சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒன்றுமட்டும் தெளிவு. இந்நாட்டை தோற்கடிக்க எழுந்த சக்திகளுக்கு எதிராக எங்கள் மூதாதையர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்த மண்ணில் போரிட்டார்கள். அந்த கடந்த கால வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிசங்களுக்கு ஏற்பவும் போய், புராதன பரம்பரையினருக்கு,சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்துச் சமூகங்களின் முன்னிலையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த யுகத்தில் சனங்களுக்கு இடையே இந்த சவாலை விட்டும் நீங்கிச் செல்ல முடியாதுள்ளது”எனக் குறிப்பிட்டுள்ளார்.



(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com