Sunday, January 5, 2014

"119" துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அவசர சந்தர்ப் பங்களின் போது பாதுகாப்பு தரப்பினரை தொடர்பு கொள்வதற்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விலக்கத்தை உரிய முறையில் பயன்படுத்தாது அதனை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போலியான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 119 தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி அதனை துஷ்பிரயோகம் செய்பவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலியான தகவல்களை வழங்கி ஏனையோரை சிரமத்திற்கு உட்படுத்த முற்படுவதாக இருந்தால் எமது நாட்டின் சட்டத்திற்கேற்ப கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

எந்தவொரு சந்தரப்பத்திலும் போலியான தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் 119 இலக்கத்தை உங்களின் தனிப்பட்ட குரோதங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டாம் என்றும் அதனை உண்மையான தகவல்களை வழங்கவும், அவசர நிலைமைகளுக்கு பயன்படுத்துமாறும் கேட்டு கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com