Sunday, January 5, 2014

கரையோர மக்களை 100 மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல்!

யாழ். வடமாராட்சி கடற்பரப்பில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக உள்ளமையின் கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயருமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ச.ரவியால் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு கிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்தில் ஏற்பட்ட தாழ் அமுக்கத்தினால் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று கரையை கடக்கும் எனவும் அதன்போது கடலலை 3 மீற்றர் உயரத்திற்கு எழும்பும் எனவும் இதனால் கரையோர மக்களை 100 மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல் விடுத்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com