இலங்கையில் இருந்து கம்போடியா கொண்டு செல்லப்பட்ட புத்தர் சிலை பாகங்கள் திருட்டு!
இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப் பட்ட கெளதம புத்தரின் பாகங்கள் கேசம், பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டு ள்ளதாக கம்போடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மலைப் பிராந்திய புனித ஸ்தலமொன்றிலிருந்து களவாடப்பட்ட அநேக சிறிய திருவுருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும் புனித சின்ங்களைக் கொண்ட பேழையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என கம்போடிய பொலிஸ் பேச்சாளர் கிர்த் சந்தாரித் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காணாமல் போன குறித்த பேழையை தேடி வருவதாக தெரிவித்த பொலிசார் திருட்டுடன் தொடர்புடைய 5 காவலர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment