சிவனொளி பாதமலை பருவகால யாத்திரை ஆரம்பம்!
சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம் பிக்கும் வகையில் சமன்தேவ விக்கிரகமும், பூஜை பொருட் களையும் எடுத்து செல்லும் ஊர்வலமானது, பெல்மதுலை கல்பொத்தாவல ரஜமகா விகாரையில் நேற்று(15.12.2013) அதிகாலை சுபவேளையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், ஊர்வ லமாக எடுத்துவரப்பட்டு இன்று அதிகாலை மலை உச் சியில் உள்ள விசேட பீடத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டதை அடுத்து யாத்திரை பருவக்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாறசிறி தெரிவித்தார்.
மேலும் இந்த யாத்திரையை புனிதமான முறையில் யாத்திரையை மேற்கொள் ளுமாறும் அதேவேளை சூழலை பாதுகாக்கும் வகையில் பக்தர்கள் நடந்துக் கொள்ளுமாறும் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். யாத்திரை காலப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதற்கமைய அடுத்த வருடம் வெசாக் பூரணை வரை பக்தர்கள் சிவனொளிபாதலைக்கு சென்று வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment