நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு சர்வமதத் தலைவர்கள் அனுதாபம் தெரிவிப்பு!
தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள தென் ஆபிரிக்க தூதுவராலயத்திற்குச் சென்ற சர்வமத தலைவர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த மண்டேலாவின் அனுதாப குறிப்புப் புத்தகத்திலும் தமது அனுதாபக் குறிப்புக்களை எழுதி கையெழுத்திட்டனர்.
இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் பௌத்த மத இணைப்பாளர் வன.கலகமதமரசி தேரோ, அருட் சகோதரர் ஜோன் குணரத்தின, ஜனாதிபதியின் இஸ்லாம் மத விவகார இணைப்பாளர் அல்ஹாஜ் கலாநிதி ஹசன் மொளலானா மொளலவி, ஹிந்துமத இணைப்பாளர் சிவஸ்ரீ பாபுசர்மா குருக்கள், கிறிஸ்தவ மத இணைப்பாளர் அருட்சகோதார் கெட்டியாரச்சியும் கலந்துகொண்டு சர்வமதங்கள் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
நேற்று நடைபெற்ற இந்த வைபவத்தில் தென் ஆபிரிக்காவின் தூதுவரலாயத்தின் முதலாவது செயலாளர் (Ms. Phumzile Thekiso) பௌசில் தெக்சியோ கலந்து கொண்டு சர்வமதத் தலைவர்களது அனுதாபங்களை ஏற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment