மாவைக்கு லோகசிங்கம் பகிரங்க கடிதம்! த.தே.கூ தலைமைகள் குறித்தே முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்!
வன்முறைகளை நடவடிக்கைகளை பின்னற்றுவதாக குற் றம் சாட்டப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பருத்தி த்துறை பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோக சிங்கம் மீது ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற் கொள்ளவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரால் லோகசிங்கத்திற்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் லோகசிங்கம், மாவை சேனாதி ராஜா விற்குப்பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுள் ஒரு பிரிவினரை இன்றும் சிறுபான்மைத் தமிழராக அதாவது தீண்டத்தகாதவர்கள் எனப் பிரித்துப் பார்க்கும் உங்கள் கட்சியின் தலைமைகள் குறித்தே முத லில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என லோகசிங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment