Sunday, December 15, 2013

பிக்குகளை கண்டால் ஹக்கீம் ஓடி ஒழிக்கின்றார்!! தமிழர்களும் சிங்களவர்களும் மதங்களின் அடிப்படையில் ஒன்றுதான்!

பிக்குகளை கண்டால் சாரைப் பாம்புக்கு மண்ணெண்ணை பட்டால் ஓடி ஒழிவது போன்றே; அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஓடி ஒழிக்கின்றார் எனவும் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். மதங்களின் அடிப்ப டையில் இரண்டு சமூகங்களும் ஒன்றுதான். ஆனால் இடை ப்பட்ட காலத்தில் வந்த சில இடர்களினால் தமிழ் சிங்கள் மக்களின் உறவுக்குள் விரிசல்கள் ஏற்பட்டன என அம் பாறை வித்தியானந்த மாகா பிரிவேனாவின் விஹாராதி பதி சஞ்சிந்தரிய தேரர் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் தொடர்பாக மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை வடக்கு தமிழ் மக்க ளுடன் கலந்துரையாடும் கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் இன்னும் ஒரு மாத காலத்தினுள் தரமுயர்த்தப்படும் என்பதில் எதுவித மாற்றமுமில்லை. இந்த விடயத்தில் பொது மக்களாகிய நீங்கள் என்றும் நம்பிக்கையாக இருங்கள். இதனை நான் உறுதியகாக கூறுகின்றேன்.

எனது குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் 14 பேரை ஒரு நாளில் எல்.ரீ.ரீயினர் வெட்டிக் கொன்றனர். யுத்தத்தின் பாதிப்புக்கள் அனைவருக்கும் உண்டுதான் எனவே நாம் அனைவரும் பழையவற்றினை எல்லாம் மறந்து தற்போதைய சமாதான காலத்தில் அனைவரும் இணைந்து புதுயுகம் படைப்போம்.

தற்போதைய நிலையில் தமிழ் மக்களைப் பெறுத்த மட்டில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசியல் பிரச்சனை, காணிப் பிரசசனை, கல்விப் பிரச்சனை, நிருவாக பிரசசனை போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் கடந்த கால யுத்தத்தினைக் காரணம் காட்டி தமிழ் மக்களின் சுதந்திரம் பறிக்கப் பட்டன.

இதனை இனிமேலும் விட்டுவிட முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங் கத்தின் பக்கமிருந்து அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள்.ஆனால் அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை வெறுத்து ஒதுக்கும் நோக்கத்துடன் பார்க்கக் கூடாது.

கல்முனையில் ஒரு தமிழ் பிரதேச செயலகம் அமைவதை முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்க்கின்றானார்கள். இது ஏன் எனத் தெரியாதுள்ளது. எது எவ்வாறு அமைந்தலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு நாங்கள் எந்த நேரமும் தயராக இருக்கின்றோம்.

எம்மிடம் உங்களது குறைகளைத் தெரிவியுங்கள் எம்மால் முடிந்தளவு எந்த நேரமும் உதவி செய்வோம். யார் என்ன சொன்னாலும் எவர் எப்படிக் கூறினாலும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும். அதற்குரிய பூர்வாங்க வேலைகள் தற்போது துரிதப்படுத் தப்பட்டுள்ளன' என்றார்.

3 comments :

Tharik December 15, 2013 at 12:15 PM  

முஸ்லிம்களை எதிர்ப்பதென்றால் உங்களுக்குள் உள்ள பிரச்ச்னைகளுக்கான தன்மையை கூட மாற்றி விடுகிறீர்கள்.எங்கள் அழிவில் உங்களின் ஒற்றுமை வருமென்றால் அதையும் அல்லாஹ் தான் தர வேண்டும்.இரு இனத்தை அளிதோ துன்புறுத்தியோ யாருமே வாழ்நததாக சரித்திரமில்லை.

கரன் ,  December 15, 2013 at 1:35 PM  

நண்பர் தாரிக் அவர்களே,
ஒரு இனத்தை அழித்தே துன்புறுத்தியோ யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்கின்றீர்கள். அண்மைய அம்மாறை மட்டக்களப்பு மாவட்டங்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள் தமி்ழர் முஸ்லிம்களால் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் துன்புறுத்தப்பட்டார்கள் , அரசியல் நயவஞ்சகத்திற்கு உட்பட்டார்கள், அவர்களது சொத்துக்கள் உரிமைகள் எவ்வாறு சூறையாடப்பட்டன என்பன எல்லாமே விளங்கும்.

Unknown December 16, 2013 at 6:48 PM  

mannar and jafna peoples were chasedout by tamils from their native places cannot be remembered by karan mr.n.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com