இலங்கை இந்திய ஒப்பந்தமே பிரச்சினைகளுக்கு மூலகாரணம்!!
1987 ஆம் ஆண்டு ஜுலை 29ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் ஒழுங்கான வெளிநாட்டு கொள்கையை கடைப்பி டிக்காத நிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தானது. எனினும் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் இடையே கைச்சாத்தான அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லு படியாகிறது என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல இந்திய இராணுவம் இலங்கைக்குள் வருவதற்கும் வழிவகுத்தது. அதேபோன்று இந்திய இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்பட்டது இலங்கையிலேயே என்றும் அமை ச்சர் பதிலளித்தார்.
திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களைக்கூட இந்தியாவுக்கு கொடுப்பத ற்குக் கூட இந்த ஒப்பந்தம் வழிகோலியது. இருப்பினும் எண்ணெய் குதங்களை கையளிப்புக்காக ஒப்பந்தம் கைச்சாத்திட்ட விதத்திலும் தவறு இருக்கிறது. இல ங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் எல்லா இனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. என்றாலும் அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லு படியாகும் என்று குறிப்பிட்டார்.
விஜித பேருகொட எம்.பி. கேட்ட வாய்மொழி மூலமான விடைக்கான கேள்விக்கு பதிலளித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment