Friday, December 13, 2013

இந்திய டி.வி. தொடர்கள், திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை! இந்தியா சீற்றம்!!

இந்தியாவில் தயாராகும் டி.வி. தொடர்கள், திரைப்படங்களை பாகிஸ்தான் தொலைக்காட்சி சனல்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் இவை ஒப்பந்தம் சாராதவை என பாகிஸ்தான் நீதி மன்றம் ஒன்று கட்டுப்பாடு விதித்தது. இதற்கு இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவிக்கையில், திரைப்படங்களும் டிவி தொடர்களும் எண்ணத்தின் வெளிப்பாடு, எண்ணத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் தேசபக்தர்கள் உணரவேண்டும். ஒப்பந்தம் சாராதவை என தாம் வகுத்துள்ள பட்டியலில் இருந்து இவற்றை முடிந்த விரைவில் பாகிஸ்தான் நீக்கவேண்டும் என்று திவாரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய இருதரப்பு வர்த்தக நிர்வாக நடைமுறையின்படி இந்திய தொலைக் காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் ஒப்பந்தம் சாராதவை பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவை என லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி காலித் மகமுத் கான் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களை ஒளிபரப்பவும் தடைவிதித்தார்.

ஒப்பந்தம் சாராதவை என பாகிஸ்தான் வைத்துள்ள எதிர்மறை பட்டியலில் இந்திய திரைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டவிதி ஒழுங்குமுறை ஆணை பிறப்பித்து இந்த பட்டியலை மாற்றிவிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com