முன்னாள் இராணுவ வீரரின் தலைமையில் இயங்கிய கொள்ளையர் குழு விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது!
முன்னாள் இராணுவ வீரரின் தலைமையில் இயங்கிய கொள்ளையர் குழுவென்றை விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொள்ளைச் சம்பவங் கள் பலவற்றுடன் தொடர்புடைய 6 பேரையே, புத்தளம் பிராந்திய புலனாய்வு மற்றும், விசேட குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர், பொதுமன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த முன்னாள் இராணுவ வீரர் கொள்ளையர் குழுவிற்கு தலைமை தாங்கியுள்துடன், இந்த குழுவினர் பல கொள்ளையடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் இவர்கள் கொள்ளைச் சம்பவங் களில் ஈடுபட்டு வந்துள்ளனர். புத்தளம், அட்டவில்லு, வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேசங்களில் மூன்று வீடுகளில் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். வீடுகளில் இருந்தவர்களை கட்டி வைத்து விட்டு இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், பத்துலுஓயா மற்றும் சிலாபம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment