கைக்குட்டையொன்றினால் எனது முகத்தை மூடி என்னை கொள்ளை யர்கள் கடத்தினார்கள் - தமிழ்ப் பெண் ஊடகவியலாளர்!!
தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவரை கடத்தி அவரிட மிருந்த உடமைகளை கொள்ளைக் கும்பலொன்று கொள் ளையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஊடகவியலா ளர் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்து ள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
தமிழ்ப் பத்திரிக்கையென்றில் ஊடகவியலாளராக கடமை யாற்றும் 19 வயதுடைய ரொசாந்தினி விஜயகுமார் எனபவர் கடந்த 13ஆம் திகதி காலை 8.45 மணியளவில் கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியில் சென்று கொண்டிருக்கும்போது, இனந் தெரியாத நபர்கள் கைக்குட்டை ஒன்றினால் தனது முகத்தை மூடியதாகவும், பின்னர் தான் மயங்கியதாகவும் ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித் துள்ளார்.
அதனையடுத்து அன்றையதினம் மாலை 4.30 மணியளவில் தான் சுயநினைவை பெற்றதாகவும், அப்போது தான் மட்டக்குளியில் இருந்தாகவும் கடத்திய நபர்கள் மடிக்கணணி, கையடக்க தொலைபேசி மற்றும் தனது பையிலிருந்த 200 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளதாக குறித்த பெண் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment