Saturday, December 28, 2013

மலையகத்தில் அதிசயம்! நீரில் மூழ்கிய மதஸ்தலங்கள் வெளித்தோன்றின..... (படங்கள்)

தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த் தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. மஸ்கெ லியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர் த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. இந்த காலநிலை தொட ர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடை வதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை. தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில் பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூழ்கிய மதஸ்தலங்கள்...

மவுசாக்கலை நீர்தேக்கத்தால் மூடப்பட்ட மஸ்கெலியா பழைய நகரைச் சேர்ந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன வெளித்தோன்ற ஆரம்பித்துள்ளன. இவ்வாறு வெளித்தோன்றியுள்ள மதஸ்தலங்களை படங்களில் காணலாம்.













0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com