Saturday, December 28, 2013

சவூதி ஜித்தா நகரில் மரணமாகியுள்ள சித்தி ரசீதாவின் உறவினர்கள் யார்? உடன் தொடர்பு கொள்ளவும்!

சவூதி ஜித்தா நகரில் மரணமாகியுள்ள இலங்கைப் பெண் திருமதி சித்தி ரசீதா என்பவர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் ஜித்தாவிலுள்ள இலங்கை தூதரக த்தின் கொன்சியூலர் பிரிவு வெளிநாட்டு அமைச்சின் ஊடாக அவரது உறவினர்களின் விபரங்களை அறிவதற்காக உத வியை நாடியுள்ளது.

மரணமான திருமதி சித்தி ரசீதா உம்மாவின் கடவுச் சீட்டு இலக்கம் 1336656 என்பதை மட்டுமே ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் பிரிவு அறிவித் துள்ளது. திருமதி சித்தி ரசீதா உம்மா தொடர்பாக விபரங்கள் தெரிந்திருப்பின் அவரது உறவினர்களோ, அல்லது அயலவரோ அல்லது அவர் பற்றிய விபரங்களை அறிந்தவர் எவராயினும் உடனடியாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

விபரங்கள் தெரிந்தவர்கள் வெளிவிவகார கொன்சியூலர் பிரிவுக்கு நேரடியாக வந்தோ, அல்லது 011-2437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com