Friday, November 22, 2013

பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டில் திடீர் தீ விபத்து !

பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் மேற்கு பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை இவருடைய வீட்டில் தீடிரென தீ விபத்து ஏற்பட் டது.அவருடைய குளியல் அறையில் ஏற்பட்ட தீ மளமள வென பக்கத்து அறைக்கும் பரவியது.வீட்டில் பொருத்த ப்பட்டிருந்த தீ எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து வீட்டின் பாதுகாவலர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வண்டியில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.விசாரணையில், குளியல் அறையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்காக காரணம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com