Friday, November 22, 2013

உயர் பதவிகளைக் கூறி தொலைபேசியில் மிரட்டி பண மோசடி – அவதானம்!

அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் என்று கூறி தொலைபேசி மூலம் அச்சுறுத்தி பணம் சேக ரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்க ளத்திற்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தொலை பேசி ஊடாக அச்சுறுத்தி போலியாக பண மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதா னத்துடன் செயற்படுமாறும் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.

இதுபோன்ற அனாமதேய தொலைபேசி அழைப்பு, பணம் கோரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (சி.சி.டி) பொலிஸாருக்கு இதுவரை 47 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான தொலைபேசி அழைப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அவர்கள் கோரும் பணத்தை வழங்காமல் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு, அல்லது பொலிஸ் மா அதிபரின் கட்டளையிடும் பிரிவின் 0112 854880 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறியத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com