Friday, November 1, 2013

பொதுநலவாய தலைவர் மாநாட்டுக்கென நவீன ஊடக மத்திய நிலையம்!

பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டினை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்ய மற்றும் தகவல் சேகரிக் கவுள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களு க்கென நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஊடக மத்திய நிலையம் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்தி சேகரிப்பிற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊடக மத்திய நிலையத்தின் வசதிகள் குறித்து அமைச்சர் கெஹெலிய நேரடியாக சென்று மேற்பார்வை செய்தபின்பே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டின் ஊடாக மற்றும் பிரசார உபகுழு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் பொதுநலவாய அமைப்பின் லண்டன் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய சுமார் ஆயிரம் ஊடகவியலாளர்கள் பங்குபற்றக்கூடியதாக இந்த ஊடக மத்திய நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com