Friday, November 1, 2013

ஐரோப்பிய நாடுகளின் தொலை பேசிகளை நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை!!

ஐரோப்பிய நாடுகளின் கோடிக்கணக்கான தொலைபேசி அழைப்பு விவரங்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.)சேகரித்ததாக வெளிவந்துள்ள செய்தியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

என்.எஸ்.ஏ.வின் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிய ஸ்னோடென் அந்த அமைப்பின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியதுடன் அவர் வெளியிட்ட ஆவணங்கள் சிலவற்றைக்கொண்டு ஜெர்மெனி, பிரான்ஸ் உள்பட 35 நாடுகளின் தொலைபேசியை என்.எஸ்.ஏ. ஒட்டுக்கேட்டதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த லீ முன்டோ மற்றும் இத்தாலியின் லெஸ்பிரஸ்ஸோ ஆகிய பத்திரிகைகளில் கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஒரே மாத இடைவெளியில் பிரான்ஸ் நாட்டினரின் 7 கோடி தொலைபேசி அழைப்பு விவரங்களை என்.எஸஸ்.ஏ. சேகரித்துள்ளதுடன் இதே காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் 6 கோடி தொலைபேசி அழைப்புகளை அந்த அமைப்பு ஒட்டுக் கேட்டுள்ளது என்று வெளியான செய்தி ஐரோப்பிய நாடுகளில் மேலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்னோடெனின் ஆதாரங்களைக் கொண்டு இந்த தகவலை அந்தப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

அதே வேளை இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு விடம் என்.எஸ்.ஏ. இயக்குநர் கீத் அலெக்ஸாண்டர் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் அனைத்தும் போர் நடைபெறும் பகுதிகளில் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்காக பிற நாடுகளின் உளவுத் துறைகள் எங்களுக்கு அளித்த தகவல்கள் விவரங்கள்தான் அவை எனக்குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com