Monday, November 18, 2013

நகைச்சுவை நடிகர் திடீர் கண்ணையா மரணம்!

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண் ணையா நேற்று சென்னையில் அவரது 76வது வயதில் கால மானார்.நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங் களாக அவதிப்பட்டு வந்த 'திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக் குறை வு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை அவர் காலமானார்.

சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் 'திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார்.

ஒரு படத்தில் வடிவேலுவிடம் தனது ஆட்டைப் பறிகொடுத்துவிட்டு, பின் பஞ்சா யத்தில் அதைச் சொல்லமுடியாமல் அவர் படும்பாடு மிகப் பிரபலமான நகைச் சுவையாக இன்று வரை திகழ்கிறது. கண்ணயாவுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

1 comments :

Anonymous ,  November 18, 2013 at 1:40 PM  

தனக்குப் பலவருத்தங்க்கள் இருந்தும், அதைக்காட்டிக் கொள்ளாமல் எங்கள் எல்லோரையும் மகிழ்வித்து இருக்கிறார். இவர் எம்மை விட்டுச் சென்றது எமக்கும், திரை உலகத்துக்கும் ஒரு பெரிய இழப்பு. இவர் ஆத்மாசாந்தியடைய வேண்டிக்கொண்டு, இவர் குடும்பத்துக்கு எமது அழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். VS. Drammen

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com