Monday, November 18, 2013

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றதால், மனவேதனையடைந்த ரசிகர் தற்கொலை!

கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் மனவேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செ ய்து கொண்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (வயது 20).சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான இவர், கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெறு வதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனை யில் இருந்துள்ளார்.

இவர், கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் எனக் கூறி புலம்பி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  November 18, 2013 at 10:45 AM  

தற்கொலை செய்தவன் ஒரு முழு மொக்கன். சச்சின் கடைசிக்காலங்களில் வடிவாக விளையாடவும் இல்லை. பல தோல்விகளுக்கு இவர் (சச்சின்) அதிக ஓட்டங்கள் எடுக்காததே காரணம். சச்சின் எப்பவோ நின்று இருக்கலாம், ஒய்வு பெற்றிருக்கலாம். வேறு இளைஞர்களுக்கு வழிவிட்டு இருக்கலாம்.
*******சச்சின் ******* காலம் கடந்த ஒய்வு.VS.Drammen

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com