Sunday, November 17, 2013

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்பாட்டம்

இலங்கை தீவில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சீரழிப்பதாக சுட்டிக் காட்டி இவ் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

'நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக பிரிவினை கோருபவர்களுக்கு எதிரானவர்கள்' என தம்மை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏ9 வீதி தேக்கவத்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் ஊடாக ஊர்வலமாக வந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காணாமல் போனவர்களுக்கான போராட்டம் ஒன்றினை 50 பேருடன் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் மேற்கொள்ளப்பட்ட வேளையிலேயே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபாலா செனவிரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில் பெருமளவானோர் பங்கு பற்றியதுடன் கூட்டமைப்புக்கு எதிரான சுலோகங்களையும், பிரிவினைக்கு எதிரான சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.

2 comments :

Anonymous ,  November 17, 2013 at 9:28 PM  

Good and Congratulations! This is not inof, find more way to more arrangements like this against TNA and LTTE + LTTE diasporas.

Anonymous ,  November 18, 2013 at 8:35 AM  

TNA hatred is their investment for the political business they do from the time of founders of the Fed Party or tamil arasu kadchchi
United Srilanka is the only solution to all our problems.
We need to differentiate between the
two varieties,hatred and seperation or a united country.
Multi cultural society around the world and their developments is a good example for us.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com