Monday, November 18, 2013

ஆணைக்குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகள் மூலம் தீர்வு காணப் போகின்றாராம் விக்கி!

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில், ஆணைக்குழுவொன்றை உருவாக்கி, அந்தக் ஆணைக் குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினரும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பின்போது வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத் தப்பட வேண்டும் என யாழ். மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத் தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் வடமாகாணத்தின் 5 மாவட்டங் களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்பாளர்கள் 5 பேர் கடமையாற்றுவார்கள் என்பதுடன், அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com